சென்ற பகுதியின் தொடர்ச்சி…
மதுமிதாவின் பின்னாலிருந்து திடீரென ஒரு ஆண் “எக்ஸ் கியூஸ்” மீ என குரல் கொடுத்து பேசும் சத்தம் கேட்டதும் மதுமிதாவின் முகமும் மனமும் சந்தோஷத்தில் மடை திறந்த வெள்ளம் போல குதுகலித்தது.
அது கவினுடைய குரல்.. அதனால் தான் அவளின் முகத்தில் இத்தனை ஆர்பரிப்பு, சந்தோஷம் எல்லாம்.. ஆனால் கவின் தன்னுடைய வண்டியை பார்க் செய்வதற்கு செல்லும் வழியில் இவள் குறுக்கே நின்றதால் ஒதுக்க சொல்வதற்காக தான் அழைத்திருக்கிறான்.
அவள் ஒதுக்கியதும் இவளை தெரியாதது மாதிரியும் இதற்கும் முன் சந்தித்து பேசாதது மாதிரியும் அவளை கடந்து சென்றுவிட்டான்.
அவன் இப்படி தன்னை கண்டும் காணாதது மாதிரி சென்றதால் பிரகாசமான முகம் மீண்டும் சுருங்கி போனது.
கவின் தன்னை பார்த்தும் பேசவில்லைமென்றாலும் தன்னை ஏற்கெனவே தெரியும் என்பதற்காகவது ஒரு சிரிப்பை காட்டிவிட்டு சென்றியிருக்கலாமே என மனதிற்குள்ளே நினைத்தாள்.
அவன் ஏன் அப்படி சென்றான் என தனக்குள்ளே கேட்டுக் கொண்டாள். ஒருவேளை பேசினால் எதாவது சொல்வார்கள் என அவன் நினைத்திருப்பானோ என பலவாறாக யோசித்துக் கொண்டே இருந்தாள்.
காலேஜில் கிளாஸ் ஆரம்பிப்பதற்கு பெல் அடிக்க சற்று சுதாரித்து நடந்து வர கூடவே தீபிகாவும் வேகமாக மூச்சு வாங்க நடந்து வந்து மதுவை பார்த்ததும் அவளுடன் இணைந்துக் கொண்டாள்.
மதுமிதாவிற்கு கிளாஸ்க்கு வந்தும் அவன் பேசாதது மனதிற்குள் ஒரு மாதிரி வருத்தமாக இருந்தது.
கிளாஸில் ப்ரோபசர் பாடம் நடத்துவதை கவனிக்கமால் அதை பற்றி நினைத்துக் கொண்டே இருக்க.
திடீரென வந்த யோசனையாக ஒருவேளை அவன் ப்ரோப்போஸ் செய்ததற்கு இன்னும் பதில் எதுவும் சொல்லாததால் பார்த்தும் எதுவும் அமைதியாக சென்று இருப்பான்.
என மனத்திற்குள் கவின் பார்த்தும் பார்க்காதது போல் சென்றதற்கு ஒரு கேள்வி பதில் ஆர்பாட்டமே நடத்திக் கொண்டிருந்தாள் மதுமிதா.
ஒரு சின்ன விஷயத்திற்கு இவ்வளவு தூரம் மனத்திற்குள் ஆர்பாட்டம் நடத்தும் அளவிற்கு கவின் எப்படி தன் மனத்திற்குள் வந்தான் என்பது மதுமிதாவிற்கே திரும்பி நினைத்து பார்க்க ஆச்சரியமாக இருந்தது.
ஒருவேளை காதல் என்பது “ரஜினி படத்துல சொல்ற மாதிரி எப்போ வரும் எப்டி வரும் யாருக்கும் தெரியாது.
ஆனா வர வேண்டிய நேரத்தில கரைக்டா வரும்” சொல்ற மாதிரி இதுதான் தன் காதலுக்கான நேரமாக இருக்குமோ என்ற ஆழ்ந்த யோசனையிலே ப்ரேக் டைம்க்கான பெல் அடித்தது கூட தெரியாமல் உட்காந்திருந்தாள்.. மதுமதி இருக்கும் நிலையை பார்த்து தீபிகா, அவளின் தோள்பட்டை தட்டி,
“ஏய் என்னடி ஆச்சு.? அதான் உன் ப்ராப்ளம் எல்லாம் மேக்ஸிமம் சால்வ் ஆகிடுச்சு நேத்து தான சொன்ன.. இப்பவும் ஏதாவது திங்கிங் பண்ணிட்டே இருக்க.
உனக்கு என்னதான்டி ஆச்சு.. டு டே ஏதாவது ப்ராப்ளமா?” அடுக்கடுக்காக கேள்விகள் கேட்க கிளாஸ்ஸை விட்டு வெளியே வந்து நடந்துக் கொண்டே
“ப்ராப்ளம் இல்லடி.. ஆனா ஒரு விஷயத்துக்கு மட்டும் பதில் தெரியல. அதான் மண்டைய போட்டு குடஞ்சு திங் பண்ணிட்டு இருக்கேன்..” சொல்ல
“அப்படி என்ன விஷயம் டி.. எதும் லவ் மேட்டரா?” தீபி கேட்க மதுமிதாவின் மனத்திற்குள் ஒருபக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இப்போது இவளிடம் ஆமாம் என சொன்னால் எப்படியும் மற்ற எல்லோருக்கும் தெரிய வாய்ப்பிருக்கிறது என்பதால் உடனே
“அதலாம் இல்லடி.” சொல்லி அப்போதைக்கு சமாளித்து மழுப்பிவிட்டாள் மதுமிதா.
“பின்ன என்ன மேட்டர்டி.? இவ்ளோ திங் பண்ணிட்டு இருக்க” கேட்க மதுமிதாவுக்கு என்ன சொல்லி இவளை சமாளிப்பது என்ற குழப்பத்தில் இருந்தாள்.
நாம் அமைதியாக இருந்தாலும் நம் மனம் அமைதியாக இருக்கவிடாமல் யோசிக்க வைத்து ஏதாவது ஒரு பிரச்சனை உண்டாக்கி மிக சுலபமாக யாரிடமாவது சிக்கலில் மாட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறது..
பின் வாய் போன போக்கில்,
“அது ஒன்னுமில்ல டி. நேத்து அந்த போலீஸ் என்னைய காப்பத்தினாரே..” சொல்ல
“எந்த போலீஸ்?” தீபிகா கேட்க
“அதான் டி நா சிக்னல்ல வச்சு அடிச்சேன்ல” மதுமிதா சொல்ல
தீபி உடனே, “அட அது நம்ம காலேஜ் பிஜி பையன்ல.. நீ தான டி போலீஸ் இல்ல பயமுறுத்த தான் அப்படி சொன்னாத சொன்ன. இப்ப நீயே மாத்தி சொல்ற” கிண்டலாக கேட்க
மதுமிதா மனத்துக்குள்ளே “இவ வேற என் சிட்டிவேஷன் புரியாம கிண்டல் பண்ணிட்டு இருக்காளே” கடுப்பாகி
“இப்ப அது ரொம்ப முக்கியம் பாரு. மேட்டர் என்னானு கேளுடி.”
“சரி சொல்லு..”
“இல்லடி. நேத்து என்னைய சேவ் பண்ணார்ல.. அதுக்கு…”
“அதுக்கு என்ன?”
“அதுக்கு ஒன்னுமில்லடி..”
“பின்ன ஒன்னுமில்லனா ஏன்டி திங் பண்ணிட்டே இருக்க.. விட வேண்டியதான..”
“அட அது இல்லடி.. என்னைய அந்த கும்பல்ட்ட இருந்து சேவ் பண்ணதுக்கு ஒரு தாங்க்ஸ் கூட சொல்லலடி.” மூச்சு விடாமல் முழு முச்சாக சொல்ல
தீபிகா “சொல்லலையா?” தலையை ஆட்டிய படி கேட்க மதுமிதாவும் தலைகுனிந்தபடியே “இல்லை” என தலையாட்டினாள்.. அதன் பின் தீபிகா தன் தலையில் அடித்துக் கொள்ள,
“ஏன்டி நீ தலையில அடிச்சிக்கிற”
“பின்ன, உன் கூட சேந்ததுக்கு வேற என்ன பண்ண சொல்ற?”
“ஏன் டி அப்படி சொல்ற.. அப்படி என்ன பெருசா பண்ணிட்டேன்.?”
“ஓ.. இத விட பெருசா பிரச்சினை பண்ணனும் வேற நெனப்பு இருக்கா” தீபா சத்தமாக கேட்க
“பிரச்சனை பண்ண இல்லடி.. தாங்க்ஸ் மட்டும் சொல்லனும்.. அவ்வளவு தான்..”
“ஏன்டி நேத்து காப்பாத்தினதுக்கு நேத்தே தாங்க்ஸ் சொல்லியிருக்கனும் .. அத விட்டுட்டு இப்ப வந்து சொல்லல கவலைபட்டு என்ன ப்ரோஜனம்?”
“சரிடி.. இப்போ நா தாங்க்ஸ் சொல்லனும். அதுக்கு ஒரு ஐடியா குடுடி..”
“என்னது மறுபடியும் ஐடியாவா?” ஒருவித பயத்துடன் கேட்க
இந்த வெப்சைட் காமக்கதைகள் அனைத்தும் எனது TamilDirtyStories.Org வெப்சைட் -ல் இருந்து எடுக்கப்படுகிறது. தமிழ் காமகதைகள் படிக்க என்னோட வெப்சைட் வாங்க.கூகிள் தேடலில் ஏனோ என் வெப்சைட் முதல் பக்கம் இல்லை. வாசகர்கள் தயவுசெய்து எனது வெப்சைட் வந்து காமகதைகள் படியுங்கள்
“ம்ம்.. ஆமாடி..”
?உனக்கு ஐடியா குடுத்தா, நீ உன் இஷ்டத்துக்கு தா பண்ணுவ நா சொல்றத பண்ணவேமாட்டியே..”
“ஏய்.. இப்ப அப்படிலா பண்ணமாட்டேன். வெறும் தாங்க்ஸ் மட்டும் தான்டி.. பிரிஸ்டேஜ் ப்ராப்ளம் இல்லடி”
“பிரிஸ்டேஜ் ப்ராப்ளம் இல்லைனா நேத்தே தாங்க்ஸ் சொல்லியிருக்கனும்டி..”
“அய்யோ அதான் சொல்லேல.. இப்ப எப்படி மீட் பண்ணி சொல்றது மட்டும் சொல்லு.. நீ வரலேனா கூட பரவாயில்ல.. நானே மீட் பண்ணி தாங்க்ஸ் சொல்லிக்கிறேன்..”
“ஈவினிங் மீட் பண்ணி சொல்லிடு.” தீபி சொல்ல
“இல்லடி மார்னிங் பாத்தப்பவே ஸ்மைல் கூட பண்ணாம போய்ட்டாங்க..”
“பின்ன, நீ பண்ணதுக்கு ஸ்மைல் வேற பண்ணுவாங்களா?”
“போடி பன்னி.. உன்கிட்ட போய் ஐடியா கேட்டேன் பாரு.. நானே மீட் பண்ணி சொல்லிகிறேன்” பேச்சை முடிவுக்கு கொண்டு வந்தாள் மதுமிதா..
இங்கு கவினுக்கும் அதே நிலைமை தான்.. அவளை பார்த்தும் ஒரு வார்த்தை கூட பேச முடியாமல் இருந்தது கொஞ்சம் கவலையாக இருந்தது.
அட்லீஸ்ட் ஒரு சிரிப்பையாவது நம் முகத்தில் காட்டியிருக்கலாம் என இப்போது தோன்றியது. ஆனால் கவின் மட்டும் தான் தன்னுடைய காதலை சொல்லியிருக்கிறான்.
மதுமிதா அதற்கு இன்னும் எந்த பதிலும் சொல்லவில்லை.. அப்படி இருக்கும் போது அவளை பார்த்து சிரித்தால் எதுவும் தவறாக எடுத்துக் கொள்வளோ என்ற எண்ணமும் கவினுடைய மனதில் இருந்தது.
அதுமட்டுமல்லாமல் நம்மிடம் வந்து பலர் தன் காதலை சொன்ன போது ஏற்றுக் கொள்ளாதது மாதிரி இவளும் நாம் சொன்ன காதலை ஏற்றுக் கொள்ளமாட்டளா என்ற எண்ணமும் ஒருவினாடி வந்து சொல்ல தவறவில்லை.
இப்படி பலவித மன குழப்பங்களுடனே கவினுடைய காலை பொழுதும் நகர்ந்தது..
அதன் பின் காலேஜில் இருந்த நேரங்களில் அவ்வப்போது ஒருவரை மற்றவரை பற்றி சிந்தித்துக் கொண்டே இருந்தனர்.
அன்றைய தினம் சிந்தனையிலே கழிந்து முடிந்தது. இருவருக்குமே காலேஜ் முடிந்ததும் அவரவர் வண்டியை எடுக்க பைக் ஸ்டாண்டிற்கு வந்து வண்டியை எடுத்துக் கொண்டு காலேஜை விட்டு வெளியே வரும் போது ஒருவருக்கொருவர் எதிரே சந்தித்துக் கொண்டனர்.
கவின் தான் முதலில் மதுமிதா பார்த்து புருவத்தை உயர்த்தி என்ன என்பது போல் கேட்க அவளும் தனக்கிருந்த ஒருவித மன பயத்தில் ஒன்றுமில்லை என தலையாட்டி சொல்லிவிட்டு வண்டியை எடுத்துக் கொண்டு காலேஜை விட்டு வெளியே வந்தாள்.
“ச்சே.. அவனே என்னானு கேட்டான்.. கொஞ்சம் பேசனும் சொல்லியிருந்தா அவன் கூட பேசியிருக்கலாமே..நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டோமே” என தனக்குள்ளே வருத்தப்பட்டு கொண்டாள் மதுமதா..
அதே போல் கவினும் “கேட்டதுக்காகவது ஏதாவது சொல்வாள்” என நினைத்து ஏமாற்றமடைந்தை நினைத்து வருத்தபட்டுக் கொண்டான்..
கவினை பற்றி நினைத்துக் கொண்டே ஸ்கூட்டியை ஓட்டியதில் அதே சிக்னலில் இந்த முறை மதுமதா கவினின் பல்சரை மீது இடித்துவிட்டாள்.
அவன் வண்டியை இடித்ததும் யாரென இறங்கி வந்து பார்க்க மதுமிதாவும் இடித்த பயத்தில் யார் வண்டியை இடித்தோம் என பார்க்க இருவரின் கண்களும் மீண்டும் சந்தித்துக் கொண்டன.. கவின் தான் மதுமிதாவை பார்த்து,
“ஏய்.. ஸ்கூட்டி இப்ப இடிச்சதுக்கு நா உன்னைய அடிக்கவா” கேட்க மதுமிதாவிற்கு உண்மையிலே உள்ளுக்குள் பயம் வந்ததால்,
“இல்ல உங்கட்ட ஒன்னும் சொல்லனும்.. அதான் எப்படி சொல்றதுனு திங் பண்ணிட்டே வந்து தெரியாம இடிச்சிட்டேன்..” சொன்னதும் கவினின் மனதுக்குள் சந்தோஷம். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளவில்லை..
“சிக்னலை தாண்டி ஓரமா வெயிட் பண்றேன்.. நீ சொல்லனும் நெனச்சத சொல்லிடு.. இனியும் லேட் பண்ணாத.” சொல்லிட்டு இருக்கும் போது சிக்னல் விழுக வண்டியை எடுத்துக் கொண்டு சிக்னலை தாண்டி ஓரமாக வண்டியை நிறுத்தினான்.
மதுமதாவும் அவனின் வண்டியின் பின்னால் சென்று அவனிடம்,
“இல்ல.. எஸ்டர்டே அந்த ரவுடி கும்பல்ட்ட இருந்து காப்பாத்தினிங்கள..”
“ம்ம். ஆமா.. அதுக்கு என்ன?”
“அதுக்கு ஒன்னுமில்ல.. ஆனா சொல்லனும் நெனச்சத சொல்லிடனும்ல.”
“என்ன சொல்லனும் நெனச்ச?” உடனே கவின் கேட்க
“ம்ம்.. தாங்க்ஸ் சொல்லனும் நெனச்சேன் சொல்லிட்டேன்..” சொல்ல கவினுக்கு மனம் சப்பென்று ஆனது..
“வேற எதுவும் சொல்லனும் நெனக்கலையா?”
“வேற என்ன? அதலாம் நென… க்.. கல..” என்பதை அவளால் முழுமையாக சொல்ல முடியவில்லை.. அவன் மீதான காதலை சொல்ல விடாமல் ஏதோ ஒன்று அவளை தடுக்கிறது..
“ம்ம்.. ஓகே.” சொல்லிட்டு கவின் அந்த இடத்தை விட்டு வண்டியை எடுத்துச் சென்றான்.. மதுமிதாவும் கவினின் வண்டியின் பின்னாலே சென்று,
“ஹலோ மிஸ்டர் பல்சர் பாய்.. உங்கள தான்” கூப்பிட கவின் திரும்பி பார்க்க
“உங்கள தான்.. வேற யாரையும் கூப்பிடல..” சொல்ல
“என்னானு?” கேட்க
“உங்ககிட்ட வேற ஒன்னும் சொல்ல வந்தேன்” சொல்ல அது கவின் காதில் ரோட்டில் செல்லும் வண்டியின் சத்ததினால் சரியாக விழவில்லை.
“திரும்பி என்னானு?” கேட்க
?உங்ககிட்ட இன்னொன்னு சொல்ல நெனச்சேன்..” கொஞ்சம் சத்தமாக சொல்ல
“ஓ.. என்ன சொல்ல நெனச்ச” கவின் கேட்க
“அத சொல்ல தைரியமில்ல எனக்கு.. என் மனசுல இருக்குறது இந்த ஸ்கூட்டியோட நம்பர் ப்ளேட்ல இருக்கு பாத்து படிச்சு புருஞ்சுக்கோங்க” சொல்லிவிட்டு.
முன்னால் வண்டியை ஓட்டி செல்ல கவினும் அவளின் நம்பர் ப்ளேட் பார்க்க அது அவனுக்கு ஏற்கெனவே தானாக கிடைத்த புரிதலால் அவனின் மூளைக்கு சட்டென்று அவள் என்ன சொல்ல வருகிறாள் என்பதை புரிந்து கொண்டு.
வண்டியின் ஆக்ஸிலேட்டரை முறுக்கி கொண்டு அவளின் பக்கத்தில் சென்று அவளிடம், ‘உண்மையாவா?’ கேட்க அவளும் புரிந்துக் கொண்டு வெட்கத்துடன் தலையாட்ட கவினுக்கோ சந்தோஷம் தாங்க முடியவில்லை..
“சரி உன் மொபைல் நம்பர் சொல்லு” கவின் கேட்க அதற்குள் அவள் பிரிந்து செல்லும் இடம் வந்துவிட்டதால்
“அதுவும் இதுமாதிரி தெரியவரும்.. டோன்ட் வொரி” சொல்லிவிட்டு அவனை பார்க்காமல் வண்டியை வேகமாக தன் பாதையில் திருப்பி ஓடி சென்றாள் மதுமிதா…
இனியும் இந்த காதல் பயணம் தொடரும்…