அதிசயங்களும், அற்புதங்களும் நிறைந்தது தானே வாழ்க்கை
காலை 6 மணி. மரங்கள் சூழ்ந்து பறவைகளால் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட பகுதி. மனதை மகிழ்விக்கும் பகுதி. அது நடை பயிற்சி செய்யும் இடம். நானும் மற்றவர்கள் போல் நடை பயிற்சி செய்து கொண்டிருந்தேன். ஆஹா அற்புதமான தென்றல் என்னை தீண்டிச்செல்கிறது.
எனது ஆத்மாவை இந்த தென்றல் உடலை விட்டு வெளியே எடுத்து செல்கிறது. காற்றோடு காற்றாக கலந்த தருணம். ஆயிரம் கவலைகள் இருந்தாலும் இந்த காலை வேளையில் இப்படி நடப்பது இதயத்திற்கு இருதுவாக உள்ளது. ஆன்மாவை அமைதியாக்க கூடுதலாக நமக்கு பிடித்த பாடல் இதோ என் செவிகளுக்கு ஒழித்துக்கொண்டிருக்கும் பாடல்.
மன்றம் வந்த தென்றலுக்கு.
மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ.
அன்பே என் அன்பே”…..
காலை வேலை மரங்களும், பறவைகளும் மனக்கவலைகளை மக்கச்செய்கின்றது. கூடுதலாக இளையராஜாவின் இன்னிசை. ஆஹா, சொர்க்கம் என்றால் இதுதான் போல நீங்களும் என்னுடன் சேர்ந்து பயணியுங்கள். பாடல் முடியப் போகின்றது
“மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ.
அன்பே என் அன்பே”….
அன்பே என் அன்பே என்ற இந்த வரிகளை கேட்கவும் தலையை சற்று திருப்பி பார்த்தேன் ஏன் என்று தெரியவில்லை ஆனால், எதர்ச்சையாக திருப்பினேன். அப்போது ஒரு பெண்ணின் கண்களை பார்த..