சீக்கிரம் வர வை..
“நெகடிவ்” என்று செய்தி கிடைத்ததும், அவசரமாக ஒரு குளியல் போட்டு, சென்னை செல்ல விமான டிக்கெட் பதிவு செய்தேன். இரண்டு நாளில் செல்லவில்லை என்றால் முழு-லக்டௌனில் மாட்டிக் கொள்வேன் பிறகு போவது கடினம். இரவு விமானம் எதுவும் இல்லை ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு அதனால் விடியற்காலை 5 மணி போவது என்று முடிவு செய்தேன்.
ஆனால் நான் இருப்பதே நகரத்திற்கு வெளியே இங்கே இருந்து வண்டி கிடைப்பது கடினம். பரவாயில்லை முயற்சித்து பார்ப்போம் என்று போவதற்கு தயாரானேன். வீட்டில் இருந்து அழைப்பு வந்தது.
“என்னடா ரிசல்ட் வந்துருச்சா?”
“ஆமாம் அம்மா இதோ டிக்கெட் போட்டுவிட்டு சொல்கிறேன்” என்றேன்.
“சரி பாத்துவா, இப்போகூட அப்பா பிரென்ட் கால் பண்ணாரு, ரிசல்ட் வரதுக்கு முன்னாடியே கூட சொல்லுவாங்க போல அதுவும் இல்லாம நாளைக்கு இங்கே லாக்டௌன் தானே அதனால தொடர்ந்து போட்டாலும் போடுவாங்க” என்று அம்மா சொல்ல அதுவும் யோசனையாக இருந்தது.
“சரிம்மா பாத்து சொல்றேன், இங்கே இருந்து வண்டி எதுவும் இல்ல, காலைல தான் கிடைக்கும் போல அதுவும் என் ரூம்ல இருந்து போக டாக்ஸி இல்ல. அங்கே வந்தாலும் ஈ-பாஸ் எடுக்கணும் என்று அறிவிப்பு வந்தது.
“அம்மா நான..