கல்லூரியில் கடைசி வரை கடுப்போடும், கடும் சொற்களோடும் நடந்தி வந்த சிவகாமி மேடமுக்கு ஏன் திடீரென என் மேல் கரிசனை என்பது புரியாமல் குழம்பினேன். சிவகாமி எனக்கு பிடிக்காத சவகாமி என்று என் தோழிகளிடம் அடிக்கடி மேடத்தை பற்றி கிண்டல் அடிப்பேன். அதற்கு காரணம் வகுப்பில் என்னையே குறை சொல்லி கொண்டிருப்பாள்.
நான் எது செய்தாலும் குற்றம் குறை சொல்லி கடுப்படிப்பாள். சில நாட்கள் சிவகாமி மேடத்துக்கு 2 அல்லது 3 கிளாஸ் இருக்கும் போது நான் லீவு கூட போட்டு இருக்கிறேன். ஆனால் கரெக்டா அதையும் ஞாபகம் வைத்து மறுநாள் ஸ்டாஃப் ரூமுக்கு கூப்பிட்டு ஏன் லீவு, எதுக்கு லீவு, என் கிளாஸை பாய்கட் பண்ற அளவுக்கு உனக்கு அவ்ளோ திமிரா, வச்சுக்கிறேன் என்று வைது என்னை விரட்டி விடுவாள். நான் ஹாஸ்டலில் வேறு இருந்ததால் யாரிடம் சொல்லி புலம்புவது என்று தெரியாமல் மனசுக்குள் புழுங்கி கொண்டு இருந்தேன்.
இதையெல்லாம் தோழிகளிடம் மட்டுமே புலம்பிக் கொண்டிருந்தேன். சில மாணவிகள் ஏய் கோகிலா, போய் பிரின்சியிடம் புகார் கொடு அல்லது வீட்டில் பெற்றோர்களை அழைத்து வந்து பிரின்சியை பாரு என்று நிறைய அட்வைஸ் கொடுத்தார்கள். ஆனால் என்ன காரணம் சொல்லி புகார்..